வடக்கில் பனை அபிவிருத்தி சபையூடாக வேலை வாய்ப்பு!

பனை அபிவிருத்தி சபையினை பல்வேறு வகையில் தரம் உயர்த்துவதற்குரிய வேலைப்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் வடமாகாணத்தில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு பனை அபிவிருத்தி சபை ஊடாக வேலை வாய்ப்பினை ஏற்படுத்தவுள்ளதாக பனை அபிவிருத்தி சபையின் தலைவர் பீ.ஏ.கிருசாந்த பத்திராஜா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் பனை அபிவிருத்தி சபையின் தலைமைக்காரியாலத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அமைச்சர் விமல் வீரவன்ச பனை அபிவிருத்தி சபைக்கு அமைச்சராக தெரிவு செய்யப்பட்ட பின்னர் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பகுதியில் அழிவுற்ற பனை வளங்களை மீளவும் கட்டி எழுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அதன் ஊடாக தொழில் வாய்ப்பு இல்லாத இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பினையும் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

அத்துடன் கணவனை இழந்து வாழ்ந்து வரும் பெண்களின் வாழ்வாதாரத்தினை மேலும் வலுப்படுத்தும் முகமாக அவர்களுக்கு சுயதொழில் ஊக்குவிப்பினை பனை
அபிவிருத்தி சபை ஊடாக பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வங்கிகள் ஊடாக சுய தொழில் கடன்களை பெற்று அவர்களுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,

பனை மரம் சார் ஊற்பத்திகளான ஜஸ்கீறிம், யோகட், பிஸ்கட் போன்ற உற்பத்திகளை அதிகரிக்க அமைச்சர் ஆலோசணை வழங்கியுள்ளார். அந்த உற்பத்தி பொருட்கள் வெகு விரைவில் வடமாகாணத்தில் உற்பத்தி செய்யவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,

அவற்றின் ஊடாக சந்தை வாய்ப்பு தொழில் வாய்பினை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, மேலும் பனைசார் உற்பத்தி பொருட்களை ஜரோப்பிய நாடுகள், அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. அது தொடர்பில் தற்பொழுது அமைச்சு மட்டத்தில் பேச்சு வார்த்தை இடம்பெற்று வருகின்றது.

மேலும் உள்ளுர் உறபத்திகளை சதோச, கீல்ஸ், காகீல்ஸ் போன்ற சுப்பமார்க்கெற் ஊடக விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கொழும்பு நகரத்தில் உள்ள சுப்ப மார்க்கெற்றுகளில் வடமாகாண பனை சார் உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வரப்படுகிறது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here