பேஸ்புக் வீடியோ வெளியிட்டதையடுத்தே முச்சக்கர வண்டி சங்க தலைவரை குண்டர்கள் அடித்துக் கொன்றனர்!

இலங்கை சுய தொழிலாளர் தேசிய முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தனவை கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 8 பேரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அவர்கள் 25 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த கொலை தொடர்பான முழுமையான விபரங்கள் வெளியாகியுள்ளன.

மிரிஹான பிரதேசத்தில் உள்ள சன்மில் இன்வெஸ்ற்மென்ற் என்ற தனியார் வாகன நிதி நிறுவனத்தில் இந்த கொலை நடந்துள்ளது.

முச்சக்கரவண்டி சங்க தலைவரான சுனில் ஜயவர்தன, சாரதிகளின் பிரச்சனைகளில் முன்னின்று செயற்பட்டு வருபவர். முச்சக்கர வண்டி சாரதிகளிற்காக தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருபவதுடன், அரசியல் செயற்பாட்டிலும் ஈடுபட்டு வருபவர்.

நேற்று அவரது நண்பர் ஒருவரின் முச்சக்கர வண்டி தொடர்பான பிரச்சனையில் தலையிட்டுள்ளார். நிதி நிறுவனத்தில் முச்சக்கர வண்டியை பெற்ற அவரது நண்பருடன் நிதி நிறுவனத்திற்கு நேற்று மாலை சென்றார்.

அங்கு நடந்த உரையாடல்களை பேஸ்புக்கில் நேரலையாக பகிர்ந்தார். கொரோனா லொக் டவுன் காலத்தில் நிதி நிறுவனங்களில் மாதாந்த கொடுப்பனவை சாரதிகள் செலுத்துவதிலுள்ள சிரமத்தை அதில் குறிப்பிட்டார்.

அந்த நேரத்தில், நிதி நிறுவனத்தின் சார்பில் வாகனங்களை பறித்தெடுக்கும் குண்டர் படை உறுப்பினர்களும் அங்கிருந்தனர்.

நிதி நிறுவனத்தை விட்டு சுனில் ஜயவர்த்தன வெளியேறியபோது, வாயிலில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். நிதி நிறுவன வாயிலில் அவர் வீழ்ந்து கிடக்க, அவரை குண்டர்கள் தொடர்ந்து தாக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here