முதலிரவன்று மனைவியை கொன்றுவிட்டு தற்கொலை செய்த கணவன்!

காட்டூர் அருகே புதன்கிழமை முதலிரவன்று மனைவியைக் கொலை செய்து விட்டு கணவனும் தூக்கிட்டு தற்தொலை செய்து கொண்டார்.

காட்டுர் காவல் நிலைய எல்லை குட்பட்ட சோமஞ்சேரி ரெட்டிப்பாளையம் கிராமத்தில் வசித்து வந்தவர் நீதிவாசன் (24). இவருக்கும் எண்ணூர் சாட்டாங்குப்பத்தை சேர்ந்த சந்தியா (20), என்பவருக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு, ஜூன் மாதம் 10ஆம் தேதி வாயலூர் கிராமத்தில் உள்ள, பவானி அம்மன் கோயிலில் திருமணம் நடைபெற்றுள்ளது.

இதையடுத்து மணமகன் வீட்டில் முதலிரவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளது. முதலிரவின் போது, கணவன், மனைவி இருவருக்கும் சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் நீதிவாசன் மனைவியை கடப்பாரையில் அடித்துக்கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்து தப்பி ஓடிய நீதிவாசன், ஏரிக்கரை அருகே உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த காட்டூர் காவல்துறையினர் அங்கு சென்று, இருவரின் சடலத்தை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமான நாளன்றே மனைவியை கொலை செய்து விட்டு கணவன் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காட்டூர் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here