அட்டனில் மழை – நகரப்பகுதியில் சில வீதிகள் நீரில் முழ்கின

0
மலையகப் பகுதியில் அட்டன், நோர்வூட், கொட்டகலை, வட்டவளை, மஸ்கெலியா, தலவாக்கலை ஆகிய பகுதிக்கு 12.04.2018 அன்று மதியம் 2 மணிமுதல் 4 மணிவரை பெய்த கடும் மழை காரணமாக போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு, அட்டன் நகரப்பகுதியில் சில வீதிகள் நீரில் முழ்கியுள்ளன.
 
அட்டன் கொழும்பு பிரதான வீதியில் மல்லியப்பு பகுதியில் நீர் செல்லும் வடிக்கான்கள் மூடியதனால் நீர் வெளியேறி வீதிக்கு செல்வதனால் அவ்வீதியினூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நகரின் பாதைகளில் வெள்ளபெருக்கெடுத்ததுடன், நகருக்கு வருகைத்தந்தோர் திடீரென மழை பெய்தமையினால் பாதிப்புக்குள்ளாகியிருந்தனர்.
 
அட்டன் கொழும்பு பிரதான வீதியிலும், அட்டன் நுவரெலியா பிரதான வீதியிலும் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், வீதி வழுக்கும் தன்மையாக இருப்பதனாலும் வாகன சாரதிகளை மிகுந்த அவதானத்துடன் செலுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here