குரங்கின் மூக்கு, கண்ணுக்கு பதிலாக பெரும் ஓட்டை: அடுத்த அதிர்ச்சி!

அன்னாசிப்பழத்தில் வெடிபொருள் வைத்து யானைக்குக் கொடுத்த சம்பவத்தைத் தொடர்ந்து தற்போது கேரள மாநிலம் வயநாடு பகுதியில் மூக்கு, கண்ணுக்கு பதில் மிகப்பெரிய ஓட்டையோடு காணப்படும் குரங்கு ஏராளமான கேள்விகளை எழுப்புகிறது.

வயநாடு பகுதியில் முத்தங்காவில் அமைக்கப்பட்டிருக்கும் கரோனா தனிமைப்படுத்தும் மையத்தில் ஏராளமான குரங்குகள் காணப்படுகின்றன. அதில் ஒரு குரங்கு மிக கோரமான முகத்தோடு காணப்பட்டதை வயநாட்டைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவர் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில் இருக்கும் குரங்கின் முகத்தில் வலது பக்க கண் மற்றும் மூக்கு இல்லை. அதற்கு பதிலாக அந்த இடத்தில் மிகப்பெரிய ஓட்டைதான் உள்ளது. அதன் கையும் மிக மோசமாக சேதமடைந்துள்ளது. இந்த குரங்குக்கு என்ன நடந்திருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கும் போது அனைவருக்குமே யானையின் நிலைதான் நினைவுக்கு வருகிறது.

இந்த குரங்கின் கையும் சேதமடைந்திருப்பதால், மற்ற குரங்குகளைப் போல அதனால் மரத்துக்கு மரம் தாவவும் முடியவில்லை.

இந்த புகைப்படம் கேரள வனத்துறை அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here