அவுஸ்திரேலியாவில் நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டவர்களிற்கு கொரோனா!

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற இனவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், மினியாபோலிஸ் நகரில் கடந்த மாதம் 25ஆம் திகதி ஜோர்ஜ் ஃபிளாய்ட் (46) என்ற கறுப்பினத்தைச் சேர்ந்தவரை பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப் பிடித்தனர். அப்போது, டெர்ரக் சவுவின் (44) என்ற பொலிஸ் அதிகாரி, ஃபிளாய்டைக் கீழே தள்ளி அவரது கழுத்தில் காலை வைத்துப் பலமாக அழுத்தினார். இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து உலகின் பல பகுதிகளில் போராட்டம் வெடித்தது. அவுஸ்திரேலியாவிலும் இம்மாதிரியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த நிலையில் அவுஸ்திரேலியாவில் விக்டோரியா மாகாணத்தில் நடந்த இனவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக விக்டோரியா மாகாண அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து விக்டோரியா மாகாண சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், “போராட்டத்தில் கலந்துகொண்ட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அப்போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கொரோனா அறிகுறி உள்ளதா என்பது குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள்” என்று தெரிவித்துள்ளது.

மெல்பேர்னில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சென்ற நபர் ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று வெளியாகியுள்ள இந்த தகவலை அடுத்து, இனிமேல் தொடர்ந்தும் இவ்வாறாக ஆர்ப்பாட்டத்தில் பங்குகொள்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று பிரதமர் ஸ்கொட் மொறிஸன் தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டத்திற்கு அடுத்த நாளிலிருந்து இவருக்கு கொரோனா அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்திருந்ததாகவும், ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்பாகவே இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் பத்தாயிரம் பேர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியாவில் கொரோனா தொற்று மற்றும் உயிரிழப்பு முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் மொத்தம் 7,274 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6,744 பேர் குணமடைந்த நிலையில் 102 பேர் பலியாகினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here