புதைந்த காட்டெருமையை மீட்கும் முயற்சியில் மக்கள்!

வட்டகொட புகையிரத நிலையத்துக்கு அருகாமையில் மண் மேடொன்றில் இருந்து விழுந்த காட்டு எருமையொன்று மண்ணுக்குள் கால்கள் புதையுண்டு உயிருக்கு போராடி வருகின்ற நிலையில் பொதுமக்கள் அதனை காப்பாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மண்மேடு இடிந்து விழுந்ததாலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

கீழே விழுந்ததில் எருமையின் இடுப்பு எலும்பு முறிந்துள்ளதாகவும், இதனால் தவழ்ந்து தவழ்ந்தே நகர்ந்து கால்கள் புதையுண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

-தலவாக்கலை பி.கேதீஸ்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here