பருத்தித்துறையில் கடலட்டை பிடிக்க மீண்டும் வந்த வெளிமாவட்ட மீனவர்கள்!

பருத்தித்துறையில் கடலட்டை பிடிப்பதற்காக மன்னார் மீனவர்கள் முகாமிட்டுள்ளனர்.

இன்று (11) காலை அந்த பகுதியில் வாகனங்களில் வந்த மன்னார் மீனவர்கள் அட்டை பிடிப்பதற்கான முன்னாயத்தங்களில் ஈடுபட்டுள்ளனர்.

நாகர்கோவில் முதல் பருத்தித்துறை வரையான கடற்பகுதியில் அந்த பகுதி கடற்றொழிலாளர் சங்கங்களின் அனுமதியுடன் தென்பகுதி மீனவர்கள் கடலட்டை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அவர்களின் சட்டவிரோதமான அட்டை பிடிப்பு முறையால் அந்த பகுதி தொழில் பாதிக்கப்படுவதாக அந்த பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.

சட்டவிரோத அட்டை பிடிப்பிற்கு எதிரான அற்த பகுதி மக்கள் போராட்டம் நடத்தியது, மற்றும் அட்டை பிடிக்கும் பருவம் முடிந்த காரணத்தால் அவர்கள் இடத்தை காலி செய்தனர்.

இந்த நிலையில் தற்போது மீளவும் பருத்தித்துறைக்கு அட்டை பிடிக்கும் தொழில் மேற்கொள்பவர்கள் வந்திறங்கியுள்ளனர். அட்டைகளை எரிப்பதற்கான 5 எரிக்குமிடங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது. கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. எரிப்பதற்காக பெருமளவு மட்டைகள் இறக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை கொட்டடி மீனவர் சங்கத்துடனான ஒப்பந்தத்துடனேயே தாம் அட்டை பிடிக்க வந்ததாக, அட்டை பிடிக்க வந்த ஒருவர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.

ஒரு படகிற்கு 50,000 ரூபா வீதம் 50 படகுகளில் அட்டை பிடிக்க, கடற்றொழிலாளர் சங்கத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here