கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்ட பௌத்த மயமாக்கல் நடவடிக்கைக்கு எதிராக காரைதீவு பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம்

கிழக்கு மாகாணத்தில் ஜனாதிபதி செயலணி தொல் பொருள் திணைக்களத்தினால் அடையாளம் காணப்பட்ட இடங்களாக தமிழர் தாயக பிரதேசங்கள் அடையாளப்படுத்த திட்டமிட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை திட்டமிட்ட பௌத்த மயமாக்கல் நடவடிக்கைக்கு எதிராக காரைதீவு பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காரைதீவு பிரதேச சபையின் 28வது மாதாந்த அமர்வு சபையின் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் வியாழக்கிழமை(11) காலை 10 மணியளவில் சபையின் கூட்ட மண்டபத்தில் ஆரம்பமானது.

சென்ற மாத கூட்டறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது சபையில் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது. தொடர்ந்து சபையின் ஆரம்ப நிகழ்வாக கடந்த கால விடயங்கள் தொடர்பில் உறுப்பினர்களிடையே வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றது.

இதன் போது காரைதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரதேச சபையின் மக்கள் நலன் சார்ந்த விடயங்களில் ஒத்துழைப்புக்களை வழங்குவதில்லை.சுகாதார வைத்திய அதிகாரியின் நடவடிக்கைகள் குறித்து கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்இ கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் அவர்களுக்கும் எழுத்து மூலமாக அனுப்பியிருக்கின்றோம். எமது அறிக்கைக்கான பதில் இதுவரை கிடைக்கவில்லை காலம் இன்னும் தாழ்த்தப்படுமானால் மத்திய அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தி மக்களுடன் இணைந்து போராட நேரிடும் என தவிசாளர் குறிப்பிட்டார்.

மேலும் கிழக்கு மாகாணத்தில் ஜனாதிபதி செயலணி நடவடிக்கைகளுக்காக தொல் பொருள் திணைக்களத்தினால் அடையாளம் காணப்பட்ட இடங்களாக தமிழர் தாயக பிரதேசங்கள் அடையாளப்படுத்த திட்டமிட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை திட்டமிட்ட பௌத்த மயமாக்கல் நடவடிக்கைக்கு எதிராக காரைதீவு பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளம் காணப்பட்ட பூர்வீக தமிழர் நிலங்கள் பறிபோகும் நிலை காணப்படுகிறது. குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் தான் அதிக இடங்கள் தொல் பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை தமிழ் பேசும் சமூகத்தை திட்டமிட்ட முறையில் நசுக்க முனைகிறது என உறுப்பினர் ஏ.ஆர்.மொகமட் பஸ்மீர் பிரேரணையை கொண்டு வந்து உரையாற்றினார்.

தொடர்ந்து இலங்கையில் கடந்து வந்த ஜனாதிபதிகளும் இனிவரும் காலங்களில் வரும் ஜனாதிபதியும் தமிழ் மக்கள் மீதான ஆக்கிரமிப்புகளை தொடர்ந்தும் செய்து கொண்டுதான் இருப்பார்கள். தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு எதிராக பல போராட்ட இயக்கங்கள் தோற்றம் பெற்றாலும் அவை திசைமாறிச் சென்று ஆனால் ஒரே ஒரு போராட்ட இயக்கம் 30 வருட கால தமிழ் மக்களின் இருப்புக்காக போராடி இருந்து அவர்கள் இன்று இல்லை என்ற நிலையில் பல தமிழர் தாயகப் பிரதேசங்களில் அடக்குமுறைகள் தோற்றம் பெற்றுள்ளன என உறுப்பினர் இராசையா மோகன் தெரிவித்த நிலையில் இறுதியாக கிழக்கு மாகாணத்தில் ஜனாதிபதி செயலணி நடவடிக்கைகளுக்காக தொல் பொருள் திணைக்களத்தினால் அடையாளம் காணப்பட்ட இடங்களாக தமிழர் தாயக பிரதேசங்கள் அடையாளப்படுத்த திட்டமிட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை திட்டமிட்ட பௌத்த மயமாக்கல் நடவடிக்கைக்கு எதிராக காரைதீவு பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கிழக்கு மாகாணத்தின் தொல்பொருட்களை இனஇ மத வேறுபாடு இன்றி பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ண தெரிவித்திருந்தார்.இதில் கிழக்கில் உள்ள தொல்பொருட்களை அடுத்த தலைமுறைக்காக பாதுகாப்பதற்கு இனமத மற்றும் ஏனைய பாகுபாடுகள் இன்றி அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்திருந்ததுடன் கிழக்கு மாகாணத்தில் பல தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் உள்ளன. அவை பல காரணங்களால் ஆபத்திற்குள்ளாகியுள்ளன எனவே அந்த தொல்பொருட்கள் தேசிய பாரம்பரியத்துடன் தொடர்புடையவை என்பதால்இ இனமத வேறுபாடுகள் இன்றி அரசாங்கம் அவற்றை பாதுகாக்க விரும்புகின்றது

இந்த தொல்பொருள் பகுதிகளை பாதுகாப்பதற்காகவும் மீள உருவாக்குவதற்காகவும் செயலணி அனைத்து சமூகத்தினருடனும் இணைந்து செயற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.கிழக்கு மாகாணத்தின் தொல்பொருட்களை பாதுகாப்பதற்காக பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ண தலைமையில்இ ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டது.இந்நிலையில் இதற்கு தமிழர் தரப்பில் தொடர்ச்சியாக எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

-பா.டிலான்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here