UPDATE: நிதி நிறுவன ஊழியர்களாலேயே ஆட்டோ சங்க தலைவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்!

இலங்கை சுயதொழில் வல்லுநர்களின் தேசிய முச்சக்கர வண்டி சங்கத்தின் தலைவர் ஜெயவர்தன சுனில் பெரேரா நேற்று அடித்துக் கொல்லப்பட்டிருந்தார்.

அது பற்றிய மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனியார் நிதி நிறுவனமொன்றின் ஊழியர்களாலேயே அவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக தனியார் நிதி நிறுவனத்தின் 8 ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மிரிஹான பொலிஸ் பிரிவில் இயங்கும் தனியார் நிதி நிறுவனத்தில், ஜெயவர்த்தன சுனில் பெரேரா முச்சக்கர வண்டியை கொள்வனவு செய்திருந்தார். மாதாந்த வாடகை பணத்தை பெற, நிதி நிறுவனத்தின் ஊழியர்கள் அங்கு சென்றபோது தகராறு ஏற்பட்டது.

இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த இலங்கை சுயதொழில் வல்லுநர்களின் தேசிய முச்சக்கர வண்டி சங்கத்தின் தலைவர் கலுபோவில மருத்துவமனை விபத்து பிரிவில் காலமானார்.

மிரிஹானா போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here