பொதி செய்யப்பட்ட 13 போதை மாத்திரைகளை விழுங்கியவர் உயிரிழந்தார்!

13 போதைப்பொருள் மாத்திரைகளை விழுங்கிய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சில தினங்களின் முன்னர் போதைப்பொருள் பரிமாற்றம் ஒன்றை மோட்டார் சைக்கிளில் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அவதானித்துள்ளார். முச்சக்கர வண்டி சாரதியொருவர் இன்னொருவரிடம் போதைப்பொருளை வழங்கியதை அவதானித்த பொலிஸ் உத்தியோகத்தர், முச்சக்கர வண்டி சாரதியை கைது செய்தார். மற்றைய நபர் தப்பியோடினார்.

இந்த நிலையியில், நேற்று மற்றைய நபரையும் பொலிசார் கைது செய்தனர். இதன்போது, அவர் போதை மாத்திரையை விழுங்கியுள்ளார். அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனையில் பொலித்தீனால் பொதி செய்யப்பட்ட நிலையில் அவரது வயிற்றில் 13 போதை மாத்திரைகள் இருந்தது கண்டறியப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here