பொதுத்தேர்தல்: இம்முறை விரல்களில் மையிட மார்க்கர் இல்லை; நெருப்புக்குச்சி!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்காளர்களின் விரல்களில் மையிட நெருப்புக்குச்சி பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் கூழ், தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.

பொதுத்தேர்தலை கொரோனா பரவல் இல்லாமல் செய்து முடிக்க, தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளில் ஒன்றாக, விரல்களிற்கு மையிடும் முறையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அம்பலாங்கொடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாதிரி தேர்தலில், மையிடும் முறை பரிசீலிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

நெருப்புக்குச்சியின் ஒரு முனையை சப்பையா்கி விட்டு, அதன் மூலம் விரல்களில் மையிடும் முறையும், காது சுத்தமாக்கும் குச்சியும் (ear bads) பரிசீலிக்கப்பட்டது. இதில் நெருப்புக்குச்சியில் மை ஒட்டிக் கொள்ளாத தன்மை அவதானிக்கப்பட்டதையடுத்து, நெருப்புக்குச்சியின் மூலம் மையிடலாமென தற்போதைக்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

இன்னும் சுமார் 6 மாதிரி தேர்தல்கள் நடைபெறவுள்ளதால், வேறு மாற்றுக்கள் பரிசீலிக்கப்படவும் வாய்ப்புள்ளதால், மாதிரி தேர்தல்கள் முடிந்த பின்னர் அது பற்றி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here