நேற்று அடையாளம் காணப்பட்ட 10 தொற்றாளர்கள் பற்றிய விபரம்!

இலங்கையில் நேற்று 10 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

இதன்மூலம் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,869 அக உயர்ந்துள்ளது.

இயக்கச்சி (07), முல்லைத்தீவு (01) ஆகிய நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட கடற்படையைச் சேர்ந்த 08பேர், கட்டாரிலிருந்து வந்து பலகஹதென்னவில் தனிமைப்படுத்தப்பட்ட ஒருவர், மும்பாயிலிருந்து வந்து தியத்தலாவையில் தனிமைப்படுத்தப்பட்ட ஒருவர் ஆகிய 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நேற்று 65 பேர் குணமடைந்துள்ளனர்.

தற்போது 736 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 1,122 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் இது வரை 11 பேர் மரணமடைந்துள்ளனர்.

இதேவேளை, மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் 62 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here