சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வாகனத்திற்குள்ளிருந்த அடையாளம் தெரியாத உயிரினம்!

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை ஏற்றிச் செல்லும் கனரக ட்ரக் (flatbed truck) ஒன்றில் அறியப்படாத வகை உயிரினமொன்றும் இலங்கையை வந்தடைந்துள்ளது.

தனியார் நிறுவனமொன்று இந்த ட்ரக்கை இறக்குமதி செய்திருந்தது.

உயிரினத்தை கண்டதும், மேல் மாகாண வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவித்தனர். தற்போது அந்த உயிரினம் வனஜீவராசிகள் திணைக்களத்தின் பாதுகாப்பில் உள்ளது.

இது குறித்து வனஜீவராசிகள் திணைக்களம் நேற்று நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தது.

அந்த உயிரினத்தின் வகையை அடையாளம் காணும் பணிகள் நடந்து வருவதாகவும், விரைவில் தெஹிவலை மிருகக்காட்சி சாலையில் ஒப்படைக்கப்படும் என்றும் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here