தெமட்டகொட மனித வெடிகுண்டு பாத்திமாவின் வங்கிக் கணக்கிலிருந்த பணம் மாயம்!

உயிர்த்த ஞாயிறு தினத்தில் ஷங்கரில்லா ஹொட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்திய இப்ராஹிம் இல்ஹாமின் மனைவி பாத்திமா ஜிப்ரியின் வங்கிக் கணக்கில் இருந்து காணாமல் போன பணம் குறித்து சிஐடியினர் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

தெமட்டகொட, மஹாவில பிரதேசத்திலுள்ள கோடீஸ்வர வர்த்தகர் இப்ராஹிம் ஹாஜியாரின் இளைய மகனான இப்ராஹிம் இல்ஹாம், ஷங்கரில்லா ஹொட்டலில் மனித வெடிகுண்டாக வெடித்து சிதறியிருந்தார்.

அவர்களது வீட்டிற்கு பொலிசார் சோதனைக்காக சென்றபோது, இப்ராஹிம் இல்ஹாமின் மனைவி, பிள்ளைகளுடன் வெடிகுண்டை வெடிக்க வைத்து தற்கொலை செய்திருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் அவரது வங்கிக் கணக்கில் 5,435 டொலர் வைப்பிலிருந்தது. எனினும், அண்மையில் வங்கிக் கணக்கை பரிசோதித்தபோது, அதில் 293.64 டொலர் பணம் மாத்திரமே இருந்துள்ளது.

ஜனாதிபதி ஆணைக்குழுவில் நடந்த சாட்சி விசாரணையில் இந்த தகவல் வெளியானது.

இது குறித்து சிஐடியினர் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, தாக்குதலிற்கு முன்னதாக இப்ராஹிம் இல்ஹாம் இரண்டு குரல் பதிவுகளை வீட்டிலிருந்து பதிவு செய்துள்ளார். இரவு 11.48 மற்றும் அதிகாலை 12.03 மணிக்கு அவை பதிவாகின.

அந்த குரல் ஒலிப்பதிவை அவரது தம்பி இப்ராஹிம் இஸ்மாயில் தனது பெற்றோருக்கு ஒலிக்க விட்டு கேட்க வைத்துள்ளார். பொலிசார் அந்த வீட்டிற்கு சென்றபோது, இந்த ஒலிப்பதிவை அவர்கள் கேட்டுக் கொண்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here