கொழும்பு போராட்டத்தில் பொலிசார் தூக்கி வீசிய யுவதி வைத்தியசாலையில்!

அமெரிக்க கருப்பரினத்தவரான ஜோர்ஜ் ஃபிளொய்டின் கொலையை கண்டித், முன்னிலை சோசலிசக் கட்சியினர் கொழும்பில் முன்னெடுக்கவிருந்த போராட்டத்தை நேற்று பொலிசார், அதிகபட்ச பலப்பிரயோகத்தின் மூலம் தடுத்து நிறுது்தினர்.

கொள்ளுப்பிப்பிட்டி சந்தி, லிப்டன் சுற்றுவட்டத்தினருகில் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.

கொழும்பு லிப்டன் சுற்றுவட்டம் அருகே பொலிஸாரினால் தூக்கி வீசப்பட்ட யுவதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதுகு வலி காரணமாக அவர் இன்று காலி – கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கையின் போது இந்த யுவதியின் கைகள், கால்களை பொலிஸார் பிடித்து பொலிஸ் வாகனத்துக்குள் தூக்கி வீசிய காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

அதன்காரணமாக ஏற்பட்ட முதுகு வலியால் அவர் காலி போதனா அவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here