விசாரணை அதிகாரிகளை கொல்ல சஹ்ரான்குழு தீட்டிய திட்டம் அம்பலம்!

உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடாத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலின் பிரதான சந்தேக நபரான மொஹம்மட் சஹ்ரானின் புத்தளம், வனாத்தவில்லு பயிற்சி முகாமை கண்டுபிடித்த, சி.ஐ.டி.யின் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜானக மாரசிங்கவை கொலை செய்ய பயங்கரவாதிகள் திட்டம் தீட்டியமை தொடர்பில் தற்போது தகவல்கள் அம்பலமாகியுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சி.ஐ.டி. கைது செய்துள்ள சந்தேக நபர் ஒருவரின் கையடக்கத் தொலைபேசியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ள புகைப்படம் ஒன்றினை ஆராய்ந்த போதும், அது சார்ந்த விசாரணைகளின் போதும் அந்த தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே தற்போது தொலைபேசியிலிருந்து மீட்கப்பட்ட வனாத்துவில்லு முகாம் சுற்றிவளைக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

அதில் தஸ்லீம் மற்றும் பொலிஸ் பரிசோதகர் ஜானக மாரசிங்கவின் தலைகள் வட்டமிடப்பட்டிருந்துள்ளன.

அதன்படி, கைதாகியுள்ள சந்தேக நபர்களிடம் விசாரிக்கப்பட்ட போது, தஸ்லீமை கொலை செய்ய முயன்றதை போன்று, பொலிஸ் பரிசோதகர் மரசிங்கவை அடுத்ததாக கொல்லத் திட்டமிட்டிருந்ததாக தெரிவித்துள்ளர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here