சம்மாந்துறையில் மக்கள் அதிகமாக நடமாடும் இடங்களுக்கு கை கழுவும் இயந்திரம் வழங்கி வைப்பு

சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட விளினையடி-1 கிரம சேவகர் பிரிவில் இயங்கி வரும் விழித்திருக்கும் இளைஞர் கழகத்தால் கொரோனாவை கட்டுப்படுத்தும் முகமாக இன்று (10) கை கழுவும் இயந்திரம் வழங்கும் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச செயலக வளாகத்தில் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல்.எம்.ஹனீபா, உதவி பிரதேச செயளாலர் எம்.எம் ஆசிக், பொதுச் சுகாதார பரிசோதகர் சீ.பீ.எம். ஹனீபா, இளைஞர் சேவை அதிகாரி ஏ.எல்.எம்.இஸ்மாயில், கழகத்தின் தலைவர் ஏ.ஆர்.முஹம்மட் ஹுசையின், பொருலாளர் எம்.ஜே.எம்.தாரிஸ், அமைப்பாளர் ஏ.எல்.எம் அதீப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குறித்த இயந்திரமானது மக்கள் அதிகமாக நடமாடும் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை, சுகாதார பணிமனை, சம்மாந்துறை பிதேச செயலகம், சம்மாந்துறை பிரதேச சபை மற்றும் அம்பாறை இளைஞர் சேவை மன்றம் ஆகிய இடங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

-ஐ.எல்.எம் நாஸிம்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here