போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலை கண்டிக்கிறார் நாமல்!

கொள்ளுப்பிட்டியில் அமெரிக்க தூதரகத்தின் முன்பாகவும், லிப்டன் சுற்றுவட்டத்தின் அருகிலும் நேற்று போராட்டக்காரர்கள் மீது பொலிசார் தாக்குதல் நடத்தியது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் எம்.பி, நாமல் ராஜபக்சவும் இதனை கண்டித்துள்ளார்.

தனது ருவிற்றர் பக்கத்தில் நாமல் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பொலிசார் பெரும் பணியாற்றியயுள்ளனர். எனினும், சில பொலிஸ் அதிகாரிகளின் நடவடிக்கை பொலிசார் மீதான நற்பெயரை கெடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here