கனடா பொலிசார் வலைவீசி தேடும் அமல் சுரேஷ்!

கனடாவின் மார்க்கம் பகுதியில் மிரட்டி வீடு உடைத்தல் மற்றும் நுழைதல், தாக்குதல், பணம் பறித்தல், மற்றும் பல குற்றங்கள் தொடர்பாக தேடப்படும் ஒருவர் பற்றிய விபரத்த யோர்க் கவுண்டி காவல்துறை வெளியிட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிக்கு முன்னதாக, Dennison St., Markham Rd.பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்ததாக பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது. அங்கிருந்த 3 பேரை தாக்கிவிட்டு, அந்த நபர் தப்பிச் சென்றார்.

அந்த நபர் மூன்று பேரைத் தாக்கி பின்னர் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அமல் சுரேஷ் மாமூட்டில் (21) என்ற நிரந்தர முகவரியற்ற இளைஞனே தேடப்படுகிறார். தாக்குதல், மிரட்டல், பணம் பறித்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் ஏற்கனவே அவர் மீது உள்ளன.

அவர் இருக்கும் இடம் பற்றிய தகவல் தெரிநி்த எவரும் 1-866-876-5423, 7541 அல்லது 1-800-222-டிப்ஸ் (8477) தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here