ஐக்கிய தேசிய கட்சி பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கி கொடுப்பார்கள் என்பது பகல் கனவு

ஐக்கிய தேசிய கட்சி பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கி கொடுப்பார்கள் என்பது பகல் கனவு. தொழிலாளர்கள்சார் அங்கத்தினர்களிடம் அவர்கள்சார் பிரச்சனைகளை பேச முடியாதவர்கள் எங்க மலையக மக்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிக் கொடுக்க போகின்றார்கள். ஆரம்ப காலம் முதல் ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கும் அரசாங்கத்தின் கொடுப்பனவு ஐம்பது ரூபாயையும் இல்லாமல் ஆக்கியவர்கள் ஐக்கிய தேசிய கட்சியினரே இவர்களை வருகின்ற பொது தேர்தலில் ஓரம் கட்ட வேண்டும் என கூறுகின்றார். ஐக்கிய மக்கள் சக்தி நுவரெலியா மாவட்ட வேட்பாளரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன்

தமிழ் முற்போக்கு கூட்டணியின் அமைப்பாளர்களுடனான சந்திப்பு ஒன்று நுவரெலியாவில் இன்று நடைபெற்றது. இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த வேட்பாளர்

ஐக்கிய தேசிய கட்சியின் தொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது அமளிதுமளி ஏற்பட்டு தொழிலாளர் பிரதிநிதிகள் சிரிகொத்தவையில் இருந்து வெளியேரிய சம்பவம் பாபரும் அறிந்த விடயம். இவர்களுக்கே இப்படி என்றால் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் இதே நிலை தான்.

பொதுவாக ஐ.தே.க தொழிலாளர்சார் கட்சியல்ல. முதலாளிமார்சார் கட்சி என்பது யாபருக்கும் தெரியும். இவர்கள் முடிந்தளவு முதலாளிமார்களின் நலன் குறித்தே செயற்படுவர். மலையக பெருந்தோட்டங்களை எடுத்துக் கொண்டால். 95 வீதமான தோட்டங்கள் தனியார் முதலாளிமார்களுக்கே சொந்தமானது. இந் நிலையில் இவர்கள் எப்படி பெருந்தோட்ட மக்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்க முன் வருவார்கள். பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பேச்சுவார்தையின் பொழுது அரசாங்கத்தின் அமைச்சராக இருந்தவர் ஐ.தே.கட்சியின் அமைச்சர் நவீன் திசாநாயக்க இவரே அனைத்திற்கும் முட்டுக்கட்டையாக இருந்தவர். இவர் இம்முறை நுவரெலியா மாவட்டத்தில் ஐ.தே.க சார்பில் போட்டியிடுகின்றார். இவருக்கு பெருந்தோட்ட மக்கள் நல்ல பாடம் ஒன்றினை கற்பிப்பர் என நினைக்கின்றேன்.

தற்போது பொது தேர்தல் நடைபெற இருக்கின்றது. இந்த தேர்தல் முடிந்தவுடன் பெருந்தோட்ட மக்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்குதல் குறித்து பேச்சுவார்தை நடாத்த வேண்டும். அதற்கு ஒரு திடமான அரசாங்கம் வேண்டும். அதுவும் தொழிலாளர்கள் சார்பில் அக்கரை கொண்டதாகவும் இருக்க வேண்டும். அதற்கு பொருத்தமானது சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கம் என்று நினைக்கின்றேன். இதற்கு முன்னர் அனைத்து கட்சிகளுடனும் அந்ததந்த கட்சிகள் சார்பான அரசாங்களிடமும் பேசி இருக்கின்றோம் ஆனால் இது வரைக்கும் கிடைக்கவில்லை. என்று அவர் மேலும் கருத்து தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here