தளபதி சுலைமானி பற்றிய தகவலை அமெரிக்காவிற்கு வழங்கியவருக்கு தூக்கு!

ஈரானின் புகழ்பெற்ற இராணுவத்தளபதியான சுலைமானி கொலை சம்பவத்தில் அமெரிக்காவின் உளவுத்துறைக்கு தகவல் வழங்கிய ஈரானியருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தளபதி குவாசிம் சுலைமானி கடந்த ஜனவரி மாதம் 3ஆம் திகதி ஈராக்கின் பக்தாத் விமான நிலையத்தில் அமெரிக்க ட்ரோன் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார்.

இதையடுத்து இரு நாடுகளிற்குமிடையில் பதற்றம் ஏற்பட்டது. சுலைமானி கொல்லப்பட்டதற்கு அமெரிக்கா தகுந்த விலை கொடுக்க நேரிடும் என்று ஈரான் எச்சரித்தது. இதற்கு பழிதீர்க்கும் விதமாக ஜனவரி 8 ல் ஈராக்கில் உள்ள அமெரிக்க விமானப்படை தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில் குவாசிம் சுலைமானி குறித்து அமெரிக்காவின் சி.ஐ.ஏ, மற்றும் இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாட்டுக்கு முக்கிய தகவல்களை கொடுத்ததற்கு மக்முத் மவுசாவி மஜ்த் என்பவரை ஈரான் பொலிஸ் கைது செய்தது. விசாரணையில் சுலைமானி குறித்த தகவல்களை உளவு அமைப்புகளுக்கு அளித்தது உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து மக்மூத் மவுசாவி மஜ்த்தை தூக்கிலிட முடிவு செய்திருப்பதாக ஈரான் நாட்டு நீதித்துறை செய்தி தொடர்பாளர் கோலாம்ஹூசைன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here