கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குள் விளையாட்டுத் துப்பாக்கியை காண்பித்து 79 இலட்சத்தை கொள்ளையிட்டவர் வைத்தியர்!

கொழும்பு தேசிய மருத்துவமனையில் கணக்கு பிரிவில் காசாளர் ஒருவரிடம் விளையாட்டு துப்பாக்கியை காண்பித்து அச்சுறுத்தி 79 இலட்சத்திற்கும் அதிகளவான பணத்தினை கொள்ளையிட்டு சென்ற வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தேசிய மருத்துவமனையின் பண்டாரநாயக்க கட்டிடத்தில் உள்ள பண வைப்பு பெட்டக பகுதிக்கு பிரவேசித்த குறித்த வைத்தியர், மருத்துவமனையின் பணியாளர்களுக்கான மேலதிக கொடுப்பனவு, வேதனம் என்பவற்றுக்காக செலுத்தப்படவிருந்த பணத்தினை இவ்வாறு கொள்ளையிட்டு தப்பிச் சென்றார்.

பின்னர் முச்சக்கரவண்டியொன்றில் அவர் தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான வைத்தியர் ஹொரணை பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

வேறு ஒரு மருத்துவமனையில் சேவை புரியும் குறித்த வைத்தியர், பயிற்சிகளுக்காக தேசிய மருத்துவமனைக்கு சென்ற சமயத்திலேயே கொள்ளையிலீடுபட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here