நுவரெலியாவில் அதிக விலையில் உரம்: விசேட சுற்றிவளைப்பு

நுவரெலியாவில் அதிக விலைக்கு உரம் விற்கப்படுவதாக விவசாயிகள் சிலர் முறையிட்டதற்கமைய இன்று நுவரெலியா மாவட்ட நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகள் விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்தனர்.

இந்த சுற்றிவளைபின் போது 1150 ரூபாவுக்கு விற்க வேண்டிய ஒரு மூடை உரத்தை 1400 ரூபாவுக்கும் அதிகமான விலையில் விற்பனை செய்த கடைகளை நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகள் சுற்றி வளைத்துள்ளனர்.

இவர்கள் பற்றுச்சீட்டு வழங்காமல் இந்த உர விற்பனையில் ஈடுப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவ்வாறு உரத்தை விற்பனை செய்தவர்களுக்கு எதிராக நுவரெலியா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் இவ்வாறான சுற்றி வளைப்புகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளவுள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாட்டில் நிலவும் உரத் தட்டுப்பாட்டை அடுத்து நுவரெலியா நகரில் உள்ள வர்த்தகர்கள் இவ்வாறு உரத்தை பதுக்கி வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பீ.ஆர்.புஸ்பகுமாரவின் ஆலோசனைக்கு அமைய இந்த சுற்றி வளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

க.கிஷாந்தன்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here