நீதிமன்ற உத்தரவை மீறி அமெரிக்க கருப்பினத்தவருக்காக கொழும்பில் போராட்டம் நடத்த முற்பட்டவர்கள் கைது!

இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற முன்னிலை சோசலிச கட்சியின் உறுப்பினர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் கொல்லப்பட்ட கருப்பரினத்தை சேர்ந்த ஜோர்ஜ் ஃபிளொயிட்டின் மரணத்திற்கு நீதி கோரி இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும், கோட்டை நீதிமன்றம் இந்த போராட்டத்திற்கு நேற்று தடை விதித்திருந்தது.

இன்று கொள்ளுப்பிட்டி சந்தியில் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தயாரான போது, அங்கு சென்ற பொலிசார், ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்த சிலரை விரட்டி விட்டு, ஏற்பாட்டாளர்கள் 10 கைது செய்து, கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். துமிந்த நாகமுவமும் கைது செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here