பிரான்ஸில் பொலிஸ் பிடியில் கொல்லப்பட்ட கருப்பின இளைஞன் மரணம் பற்றி மீள் விசாரணை!

2016 இல் பொலிசாரின் பிடியில் உயிரிழந்த கருப்பரின இளைஞனின் மரணம் தொடர்பாக விசாரணைக்கு பிரான்ஸ் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் விவாரணை நடத்தப்பட வேண்டுமென அந்த இளைஞனின் உறவினர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அமெரிக்காவின் ஜோர்ஜ் ஃபிளொயிட் மரணத்தை தொடர்ந்து, இளைஞனின் மரணம் பற்றி மீள் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு பொலிசாரின் பிடியிலிருந்து தப்பியோடிய அதாமா தோரே என்ற 24 வயதுடைய கருப்பரின இளைஞன், பொலிசாரால் மீள கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களில் உயிரிழந்திருந்தார்.

பொலிசார் தாக்கியதில் அவர் உயிரிழந்ததாக அதாமா தோரேயின் குடும்பத்தினர் வழக்குத் தொடர்ந்தனர்.

இதற்கான நீதி கேட்கும் போராட்டம் நான்கு வருடங்களாக நடந்து வருகின்றது.

அமெரிக்காவின் ஜோர்ஜ் புளொய்டின் மரணத்தின் பின்னர், மீண்டும் அதாமா தோரேக்கான நீதிகேட்கும் போராட்டம், கொரோனா சுகாதாரப் பாதுகாப்புகளையும் மீறி, பெருமளவில் நடந்து வருகின்றது. இதில் கடுமையான வன்முறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தும்படி ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், நீதியமைச்சர் நிக்கொல் பெலுபேவிற்கு உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here