நேற்று அடையாளம் காணப்பட்ட 22 தொற்றாளர்கள் பற்றிய விபரம்!

கொரோனா தொற்றாளர்கள் 22 பேர் நேற்று (8) அடையாளம் காணப்பட்டனர். இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,857 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்ட 22 பேரில், குவைத்திலிருந்து நாடு திரும்பிய 8 பேர், சென்னையிலிருந்து நாடு திரும்பிய 4 பேர், கடற்படையினர் 10 பேர் உள்ளடங்குகிறார்கள்.

இதேவேளை, இதுவரை 990 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 856 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here