கட்டிடம் இல்லை, பூசகர் இல்லை… சிங்கள பிரதேசத்தில் அடர்ந்த காட்டின் மத்தியிலுள்ள ஆதி முருகன் ஆலயம்!

கபில்வத்தை அல்லது கபிலித்தை எனப்படும் இடம் மொனராகலை மாவட்டத்தில்- யால சரணாலயத்தின் மத்தியில் உள்ளது. அங்குள்ள முருகன் ஆலயத்திற்கு மக்கள் யாத்திரை சென்று வழிபட்டு வருகிறார்கள்.

காட்டின் மத்தியில்- பாதைகள் இல்லாத இடத்தில் ஆலயமுள்ளது. 12 சிற்றாறுகளை கடந்து, 32 கிலோமீற்றர் உழவு இயந்திரத்தில் கடினமான பயணம் மேற்கொண்டே ஆலயத்திற்கு செல்கிறார்கள்.

சரணாலயத்தின் மத்தியில், கும்புக்கன் ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள பண்டைய மரக்கோயில் இது.

ஆலயம் என சொல்லப்படுகிற தவிர, அங்கு கட்டடங்கள் இல்லை. பூசகரும் இல்லை.

கபிலித்தை எனப்படும் அந்த இடம் முருகப்பெருமான் வாழுமிடம் என்பது பிரதேச மக்களின் நம்பிக்கை.

சூரசம்ஹாரத்திற்கு முன்னதாக முருகப்பெருமான் தவமிருந்து சக்திகளை பெற்றதாகவும், பின்னர் கதிர்காமத்தில் சூரசம்ஹாரத்தை முடித்ததாகவும், பின்னர் அந்த வேலை எறிந்ததாகவும், அது புளியமரமொன்றில் விழுந்ததாகவும், அந்த புளிய மரத்தின் கீழ் வேடுவர்கள் வேலை வைத்து வழிபட்டதாகவும் கூறப்படும் ஐதீகக்கதைதான் இந்த ஆலயத்தின் வரலாறு.

பண்டைய கதிர்காமத்தில் போகர் பெருமான் வைத்து பூஜை செய்து காணாமல் போன நவாக்சரி யந்திரம் நவபாஷாணா வேல் இங்குதான் உள்ளதாகவும் ஐதீகமுள்ளது.

சைவ மக்கள் மட்டுமல்ல, அனேக சிங்கள மக்களும் இங்கு தவறாமல் வழிபாட்டிற்கு வருகிறார்கள். அந்த இடத்தை ஆதிகதிர்காமம் என்றே பண்டைய சிங்கள நூல்கள் குறிப்பிடுகின்றன.

பண்டைய சிங்கள மன்னர்கள் பலரும் இங்கு வழிபட்ட பின்னரே மகுடம் சூடியதாக பிரதேசத்தில் ஐதீகம் உள்ளது.

நவக்கோடி சித்தர்கள் இப்பொழுதும் அங்கு வந்து தவமியற்றுவதாகவும் நம்பிக்கையுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here