நின்ற வாகனத்துடன் ஆட்டோவை மோதிவிட்டு காயங்களுடன் தப்பியோடிய இளைஞர்கள்!

வீதி ஓரத்தில் தரித்து நின்ற வேன் ஒன்றின் மீது மிக வேகமாக அப்பகுதியில் வந்த முச்சகக்கரவண்டி மோதியதில் இவ்விரு வாகனங்களும் சேதமடைந்ததுடன் முச்சக்கர வண்டியை செலுத்தி வந்தவர் காயங்களுடன் அவ்விடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமுனை இலங்கை வங்கிக்கு அருகில் திங்கட்கிழமை (8) பிற்பகல் 1 மணி அளவில் இடம் பெற்றது.

தனியார் ஒருவருக்கு சொந்தமான வேன் ஒன்று வியாபார நோக்கத்திற்காக பிரதான வீதிக்கு அருகில் தரித்து நின்றுள்ளது இதன்போது அதே பிரதான வீதியால் நீல நிற முச்சக்கரவண்டி ஒன்று மிக வேகமாக வந்து மோதியுள்ளது

இவ்வாறு விபத்து இடம்பெற்ற வேளை முச்சக்கர வண்டியை செலுத்திவந்த சாரதியான விலைஞர் காயங்களுக்கு உள்ளான நிலையில் அவ்விடத்தில் இருந்து தப்பிச் சென்றார் அவருடன் முச்சக்கர வண்டியின் பின் ஆசனத்தில் இருந்த மேலும் இரு இளைஞர்களும் அவருடன் இணைந்து தப்பிச்சென்ற இதனை அவதானித்த அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்

சம்பவம் தொடர்பாக கல்முனை போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதுடன் குறித்த விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்ற மூன்று இளைஞர்களையும் தேடி வருகின்றனர் .

அத்துடன் விபத்து நடந்த இடத்தில் விசாரணை இடம்பெற்று வருவதுடன் சம்பவம் தொடர்பாக பொதுமக்களும் போலீசாருக்கு ஒத்துழைப்பினை வழங்கி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here