பெண் தீயில் எரிந்த சம்பவம்: வவுனியாவில் பெண் கைது!

வவுனியா றம்பைவெட்டி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் இன்று காலை வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

குறித்த பெண்ணுக்கும், அயலவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கைகலப்பிலேயே இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த விடயம் தொடர்பாக வவுனியா வைத்தியசாலை பொலிசாரின் தகவலுக்கமைய, மாமடு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் அதேபகுதியை சேர்ந்தபெண் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்துள்ளதாக மாமடு பொலிசார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here