கொல்லப்பட்ட கருப்பினத்தவருக்கு நீதி கோரி கொழும்பில் நடக்கவிருந்த போராட்டத்திற்கு தடை!

அமெரிக்காவில் கொல்லப்பட்ட கருப்பரினத்தை சேர்ந்த ஜோர்ஜ் ஃபிளொயிட்டின் மரணத்திற்கு நீதி வழங்கக் கோரி, கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் முன்பாக நாளை நடத்த திட்டமிடப்பட்டிருந்த போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

முன்னிலை சோசலிச கட்சி இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.

இந்த போராட்டத்தின் மூலம் தனிமைப்படுத்தல் சட்டங்கள் மீறப்படுமென கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் பொலிசார் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, நாளைய போராட்டத்திற்கு தடை விதித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here