முகக்கவச பாவனையின் பின் இலங்கையில் சுவாசநோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

பொதுமக்கள் முகக்கவசம் அணியத் தொடங்கியுள்ளதால் இலங்கையில் சுவாச நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக இலங்கை சுவாச அறுவை சிகிச்சை வைத்தியர் சங்கத்தின் தலைவர் துஷாந்த மெடகெதர தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மக்கள் முகக்கவசம் அணிய ஆரம்பித்த பின்னர், இந்த பெறுபேறு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

கண்டி ஜோர்ஜ் ஓ டி சில்வா பூங்காவில் இன்று உலக சுற்றுச்சூழல் தின நிகழ்வுகள் இடம்பெற்றன. இதில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே, இதனை தெரிவித்தார்.

தொழிற்சாலைகள், பாடசாலைகள், அரசு நிறுவனங்கள் மூடப்பட்டதாலும், வாகன போக்குவரத்தை குறைப்பதாலும், சுற்றுச்சூழல் மாசு கணிசமாகக் குறைந்துள்ளது என்று அவர் கூறினார்.

இந்த ஆண்டு சுற்றுச்சூழல் தினத்தின் கருப்பொருள் பல்லுயிரியலைப் பாதுகாப்பதும், விலங்குகள், மரங்கள், மண் மற்றும் காற்றைப் பாதுகாப்பதும் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here