கையைப் பிடித்த இளைஞனுக்கு விளக்கமறியல்!

திருகோணமலை – குச்சவெளி பகுதியில் 16 வயதுச் சிறுமியின் கையைப் பிடித்து இழுத்த 21 வயது இளைஞனை, இம்மாதம் 12 ஆம்திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க இன்று (08) உத்தரவிட்டார்.

வீட்டில் யாரும் இல்லாதபோது பாலியல் அத்துமீறல் நோக்கத்துடன் சிறுமியின் கையைப்பிடித்து இழுத்துள்ளதாக, சிறுமியின் பெற்றோரால் குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டு அமைய கைதுசெய்து நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here