ஒருவரை மோதிக்கொன்றது டிப்பர்… பூநகரியில் பதற்றம்: இராணுவச்சிப்பாய் மீது தாக்குதல்!

கிளிநொச்சி- பூநகரி வீதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். ஆத்திரமடைந்த மக்கள் இராணுவச்சிப்பாய் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

4ஆம் கட்டை பகுதியில், இராணுவ முகாமின் முன்பாக இந்த விபத்து இடம்பெற்றது.

மோட்டார் சைக்கிளில் சென்றவரை டிப்பர் மோதியதில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அந்த பகுதியில் சுமார் 250 இற்கும் அதிகமான மக்கள் குவிந்ததால் பரபரப்பான நிலைமையேற்பட்டது. விபத்து நடந்த இடத்தில் இருந்து டிப்பரை அகற்ற முயன்றபோது, பொதுமக்கள் அங்கு குவிந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பரபரப்பு மேலும் அதிகரித்தது.

இந்த சமயத்தில், பொதுமக்களை சமூக இடைவெளி பேண இராணுவத்தினர் வலியுறுத்தியுள்ளனர். இந்த இழுபறியில், பிரதேசவாசியொருவர் இராணுவச்சிப்பாய் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

பொதுமக்கள் தொடர்ந்தும் அங்கு குவிந்துள்ளனர். பதற்றமான சூழல் தொடர்கிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here