தேர்தல் திகதி குறித்த இறுதி முடிவு இந்த வாரம்!

பொதுத் தேர்தல் நடத்தும் திகதி குறித்து இந்த வாரம் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தவிசாளர் மகிந்த தேசபிரிய தெரிவித்துள்ளார்.

வேட்பாளர்களின் இலக்கங்கள் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் நாளை வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

இன்று (8) தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து, செய்தியாளர்கள் மத்தியில் பேசும்போது இதனை தெரிவித்தார்.

தேர்தலை நடத்த சுமார் 700 கோடி ரூபா செலவாகுமென முன்னர் கணிப்பிடப்பட்டிருந்த போதிலும், தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் தேர்தல் நடத்த சுமார் 900 கோடி ரூபா செலவாகலாமென எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் ரட்னஜீவன் கூல் தெரிவித்த கருத்தினால் எந்தவொரு அரசியல் கட்சியோ, வேட்பாளரோ பாதிக்கப்பட்டிருக்கவில்லையென்றும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here