17 வருடங்களின் முன்னர் நடித்த பிகினி காட்சி: மீண்டும் போஸ் கொடுப்பேன்!


ஏவிஎம் தயாரிப்பில், சரண் இயக்கத்தில், விக்ரம் கதாநாயகனாக நடித்த ஜெமினி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் கிரண். அதன்பின் அஜித் நடித்த வில்லன், கமல்ஹாசன், மாதவன் நடித்த அன்பே சிவம், பிரசாந்த் நடித்த வின்னர் உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்தார். முன்னணி நடிகையாக வளர்ந்து கொண்டிருந்தவர் அதைத் தக்க வைத்துக் கொள்ளத் தவறிவிட்டார்.

அவர் நடித்த படங்களில் ஒன்றான வின்னர் படத்தின் வடிவேலு நகைச்சுவைக் காட்சிகள் அடிக்கடி டிவிக்களில் ஒளிபரப்பப்படுவதால் இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கும் தெரிந்தவர்.

17 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த வின்னர் படத்தில் ஒரு பாடல் காட்சியில் பிகினி உடை அணிந்து நடித்ததைப் பற்றிய அனுபவத்தைத் தற்போது பகிர்ந்துள்ளார்.

“பிகினி உடை அணிந்த முதல் மற்றும் கடைசி முயற்சி. டூ பீஸ் உடை அணிய தயாரிப்பாளர்கள் என்னை ஆறு மாதமாக சமாதானப்படுத்தினார்கள். அந்த உடையை அணியும் போது என்னுள் பல கேள்விகள் இருந்தன. அதை அணிவதில் சிக்கல் இல்லை, இருந்தாலும் அந்த சமயத்தில் என்னுடைய எடை குறித்து ஒரு பயம் இருந்தது. ஆனால், பாடலும், படமும் வெற்றி பெற்றது. அப்படிப்பட்ட காட்சிகளில் நடித்து எனது ரசிகர்களை வருத்தப்படுத்தியிருந்தேன் என்பது எனக்கும் தெரியும். கோடைகாலத்தில் சரியான உடலமைப்புடன் அதை மீண்டும் செய்ய உள்ளேன்,” என இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here