இறம்பொடை வெவன்டன் தோட்டத்தில் தீ: 3 வீடுகள் சேதம்!


நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட வெவன்டன் தோட்டம் தொழிற்சாலை பிரிவில் இலய குடியிருப்பு ஒன்றில் நேற்று (01) இரவு 10.30 மணியளவில் ஏற்பட்ட தீ வீபத்தினால் மூன்று வீடுகள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன.

தீ ஏற்பட்ட உடன் பொது மக்களின் உதவியியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு தீ ஏனைய வீடுகளுக்கு பரவாமல் காப்பாற்றபட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கேள்விபட்ட ஜீவன் தொண்டமான் சம்பவ இடத்திற்கு விஜயம் செய்து தீ அணைப்பவர்களுடன் இனைந்து செயற்பட்டதுடன், பாதிக்கபட்டவர்களுக்கான நிவாரணங்களை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

மின் ஒழுக்கு காரணமாக இந்த தீ வீபத்து ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேக்கப்படுகின்றது. இந்த தீ வீபத்தினால் பெருமளவு பெருமதியான பொருட்கள் சேதமாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here