கொரோனா அபாயம் முடிவதற்குள் அடுத்த அபாயம்: மீண்டும் தலைதூக்கும் எபோலா!


ஏற்கெனவே கொரோனாவினால் உலக நாடுகள் திக்குமுக்காடி வரும் நிலையில் கொங்கோவில் புதிய எபோலா வைரஸ் தொற்றுக்கள் நாட்டின் மேற்குப்பகுதியான வங்கத்தா மண்டலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதையத்து அங்கு பீதி நிலவி வருகிறது.

இதுவரை 6 பேருக்கு எபோலா கண்டுப்பிடிக்கப்பட்டதில் 4 பேர் மரணமடைந்துள்ளனர். 2 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.

இந்நிலையில் உலகச் சுகாதார அமைப்பின் டெட்ரோஸ் அதனம் கேப்ரியேசஸ் கூறும்போது, “கோவிட்-19 மட்டும் இந்த உலகை அச்ச்றுத்தும் நோய் அல்ல. எபோலா உள்ளிட்ட இன்னும் சில வைரஸ் அச்சுறுத்துல்களும் உள்ளன” என்று எச்சரித்தார். இப்போதைக்கு கொரோனா மீது நம் கவனம் இருந்தாலும் உலகச் சுகாதார அமைப்பு இதே போன்ற பிற மக்கள் தொற்று நோய் மீதும் தீவிர கண்காணிப்புக் கொண்டுள்ளது என்றார் கேப்ரியேசஸ்.

இது கொங்கோவின் 11வது எபோலா வைரஸ் தாக்கமாகும், 1976 இல் கொங்கோவில் முதன் முதலில் கண்டுப்பிடிக்கப்பட்டது.

உலகச் சுகாதார அமைப்பு இது தொடர்பாகக் கூறும்போது, “கொங்கோ விலங்குகள் பண்ணைகளில் எபோலா வைரஸ் உள்ளது. அது நாட்டின் பல பகுதிகளிலும் எபோலா வைரஸ் தாக்குதல் இருக்கும் நிலை உள்ளது” என்று எச்சரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here