நேற்று அடையாளம் காணப்பட்ட 10 தொற்றாளர்கள் பற்றிய விபரம்!


இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,643 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று 10 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த 24ஆம் திகதி 276 பேர் பங்களாதேஷிலிருந்து நாட்டுக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 4 பேர், நேற்று அடையாளம் காணப்பட்டனர்.

கடற்படையினர் இருவர், இந்தியா மற்றும் பெலாரஸ் நாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் இருவர், இராணுவச்சிப்பாயின் உறவினர்கள் இருவர் ஆகியோர் அடையாளம் காணப்பட்டனர்.

821 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.  811 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here