திருமணம் செய்யாமலேயே அப்பாவாகும் இந்திய கிரிக்கெட் வீரர்!


இந்திய கிரிக்கெட் வீரர் ஹார்டிக் பாண்ட்யா விரைவில் தந்தையார் என்று அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஹார்டிக் பாண்ட்யாவுக்கு கடந்த ஆண்டு (2019) செப்டம்பர் மாதம் முதுகில் காயம் ஏற்பட்டது. அதற்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சையின் பின்னர் இந்திய அணிக்காக எந்த போட்டிகளிலும் விளையாடவில்லை. மார்ச் மாதம் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்தியா அணியில் அவர் சேர்க்கப்பட்டார். ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஆட்டம் பாதியாக ரத்து செய்யப்பட்டது.

இதற்கிடையில், ஹார்டிக் பாண்ட்யா கடந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி துபாயில் இருந்தபோது, ​​நடிகையும் மொடலுமான நடாஷா ஸ்டான்கோவிக்குடன் (செர்பியாவிலிருந்து) ஒரு நிச்சயதார்த்த புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஊரடங்கு உத்தரவின் போது, ​​இருவரும் சேர்ந்து வாழ்ந்தனர். ஆனால் திருமணம் செய்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

இதற்கிடையில், ஹார்டிக் பாண்ட்யா தனது இன்ஸ்டாகிராமில் நடாஷாவுடன் ஒரு புதிய படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் நடாஷா கர்ப்பமாக இருக்கிறார் என்ற மகிழ்ச்சியான செய்தியை அறிவிக்கிறார். இது குறித்து ஹார்டிக் பாண்ட்யா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “நடாஷாவும் நானும் சேர்ந்து ஒரு சிறந்த பயணத்தை மேற்கொள்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார். தற்போது இது இன்னும் சிறப்பாக உள்ளது. எங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய உறவை விரைவில் வரவேற்க நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் வாழ்க்கையின் ஒரு புதிய அத்தியாயத்திற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். உங்கள் ஆசீர்வாதத்தையும் வாழ்த்துக்களையும் எதிர்பார்க்கிறோம்.

இந்திய கிரிக்கெட் அணியின் கப்டன் விராட்கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இந்திய கிரிக்கெட் வீரர்கள் முகமது ஷமி, யூஸ்வேந்திர சாஹல், மாயங்க் அகர்வால் ஆகியோர் சமூக வலைப்பின்னல் தளத்தில் ஹார்டிக் பாண்ட்யா மற்றும் அவரது மனைவி நடாஷா ஆகியோரை வாழ்த்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here