யாழ் நூலகம் எரிக்கப்பட்ட திகதியை பிழையாக சொல்லி வரலாற்றை திரிக்காதீர்கள்!


யாழ் நூலகம் எரிக்கப்பட்ட திகதியை தவறுதலாக குறிப்பிட்டு, வரலாற்றை திரிவுபடுத்த வேண்டாமென கேட்டுள்ளார், யாழ் நூலக எரிப்பு காலகட்ட சம்பவங்களுடன் நேரடியாக தொடர்புபட்டவரும், வடக்கு அவைத்தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம்.

நூலக எரிப்பு சம்பவத்தை நேரில் கண்டது தொடர்பாக அப்போது ஆணைக்குழுவின் முன்னிலையிலும் சீ.வீ.கே சாட்சியமளித்திருந்தார்.

இன்று (1) யாழில் செய்தியாளர்களை சந்தித்தபோது,

யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டு 39 ஆவது நினைவு தினம் இன்றாகும். இந்த நூலகத்தைப் பொறுத்தவரை அது தமிழ்த் தேசியத்தின் பொக்கிஷம், சொத்து என்பது எல்லோரும் அறிந்த விடயம். ஆகவே, எல்லோரும் சில கருத்துக்களைச் சொல்லாம். ஆனால் இப்பொழுது அண்மைக் காலமாக இந்த நூலகம் எரிக்கப்பட்ட திகதி மிகத் தவறாக  ஊடகங்களிலும் நூல்களும் எழுதப்பட்டு வருகின்றது. ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வின் திகதி தவறாக முன்வைக்கப்படுவதை அந்த நிகழ்வோடு நேரடியாக சம்பந்தப்பட்டவன் என்ற வகையிலே அதை தெளிப்படுத்த வேண்டிய தேவை எனக்கு இருக்கின்றது.

இன்றைய சில ஊடகங்களில் எழுத்து ஊடகங்கள், அச்சு ஊடகங்கள்,  இணைய தளங்களைப் பார்த்தால் கூட இந்த நூலகம் மே மாதம் 31 ஆம் திகதி  எரிக்கப்பட்டது என்ற தகவல் இன்றைய பத்திரிகைகளில் கூட ஊடகங்களிலே வந்துள்ளது. உண்மையாக இந்த நூலகம் எரிக்கப்பட்டது எல்லாருக்கும் தெரியும் ஜூன் மாதம் என்று எல்லோரும் இதுவரையில் பேசப்பட்டு வந்திருக்கின்றோம். மே மாதம், மே மாதம் என்று 31 ஆம் திகதி என்று வருகின்ற போது ஒரு வரலாறு திரிவுபடுத்தப்பட்டு வருகின்றது.

ஆரம்பத்திலே நாங்கள் நூலகம் எரித்த உடனடியாக இதற்கான மீள் நிரப்பு சம்பந்தமாக நிதி உதவி கோரி ஒரு ஆவணத்தை வெளியிட்டிருந்தோம். அந்த ஆவணத்திலே முதலாவது ஆரம்பமே 1981 ஜுன் மாதம் முதல் நாளிலே இராப் பொழுதில்தான் யாழ்ப்பாண பொதுசன நூல் நிலையத்தின் விலை மதிக்க முடியாத சோர்வுகளான 97 ஆயிரம் புத்தகங்கள் கிடைத்தற்கரிய பல கையொழுத்து பிரதிகளுடன் சாம்பலாக்கப்பட்டதும் கட்டடவியல் வடபகுதியின் பெருமைக்குரிய ஒரு கட்டடம் பாரதூரமான சேதத்திற்குள்ளாகியதும் ஆகும். இந்த ஆவணம் 1981 ஆம் ஆண்டு இறுதியில் அதாவது 1982 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் நிதி சேகரிப்புக்காக வெளியிடப்பட்ட ஆவணம். இந்த ஆவணம் இருக்கிறது. இதிலே ஆங்கிலத்திலும் ”IT was the first of june. 1981 and the hours of the night, when the priceless collection of 97,000 books and some raremanuscripts in the Jaffna public Library were burned to ashes and a building which was the architectural pride of the North burnt and severely damaged.” இதுவும் அதாவது ஜுன் மாதம் முதலாம் திகதி இரவு என்பதை இந்த இரண்டு ஆவணமும் உறுதிப்படுத்துகின்றது.

இது எங்களுடைய 1981 ஆம் ஆண்டு டிசெம்பரிலும் 1982 ஆம் ஆண்டு ஜனவரியிலும் வெளியிடப்பட்ட ஆவணம். அதே மாதிரி ஒரு நூலகம் ஒன்றை எடுத்துக் கொண்டால் இந்த எங்களுடைய நூலக ஆலோசனைக் குழுவிலே பேராசிரியர் நேசையா ஒரு உறுப்பினராக இருந்தவர். அவர் காலம் சென்றுவிட்டார்.  RISING FROM THE ASHES என்ற திரு.என்.செல்வராஜா எழுதிய கட்டுரையிலே பந்தி இரண்டிலே பேராசிரியர் நேசையா இவ்வாறு கூறுகின்றார். ”It was then nearly 800 years after that, on the inglorious first of June 1981, the Priceless collection of nearly 100,000 books in the Jaffna public Library was consigned to the flames and a building which was the architectural pride of the North severely damaged.” இதே வார்த்தைகள் முன்னுக்கும் வந்திருக்கின்றது. இதிலேயும் பேராசிரியர் நெசையா ஜுன் மாதம் முதலாம் திகதி என்றுதான் ஆவணப்படுத்தி தந்திருக்கின்றார் இந்தப் புத்தகத்தில் ஒரு நூல். அதை விட நாங்கள் 1984 ஆம் ஆண்டு கவுன்ஸில் போனாப் பிறகு ஜுன் மாதம் 4 ஆம் திகதி அமரர் அமிர்தலிங்கம் அவர்கள் மூலமாக இந்த நூலகம் திறந்து வைக்கப்பட்டது. அதிலே இப்போதும் கூட சில குற்றச்சாட்டு. நேற்றும் பார்த்தேன். நாங்கள் அந்தக் காலத்திலே முழுமையாக அரசியல் இல்லை. நாங்கள் திட்டமிடுகின்ற பொழுது இந்த எரிந்த நூலகத்தினுடைய தென்கிழக்கு கீழ்த்தளம் நினைவிடமாகத் திருத்தப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையிலேதான் எங்களுடைய செயற்பாடு தொடர்ந்து இருந்தது. அதற்கும் மேலாக அந்த நூலகத்தினுடைய ஆரம்ப மூல வரைபடத்தில் மேற்குப் புற கட்டடம் அமைப்படாமல் இருந்தது. அதை நாங்கள் புதிதாக அமைக்கப்பட வேண்டும் என்ற அந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு 04.06.1984 இல் அமுதலிங்கம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அந்த அறிமுக விழாவிலே இதற்கான ஒரு திறப்பு விழா மலர் ஒன்று வெளியிடப்பட்டது. அந்த மலரிலே முன்னுரையிலே ஆங்கிலத்திலே ”It was the first of June 1981 and the still hours of the night” என்று அதில் சொல்லப்படுகின்றது. அதற்குப் பிறகு அமரர் அப்பாப்பிள்ளை அமுதலிங்கம் அவர்களுடைய வாழ்த்துச் செய்தி அவருடைய செய்தி இருக்கின்றது. அவரும் அதிலே 1981 ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதலாம் திகதி ஆளுவோரின் காவற்துறையினர் 97 ஆயிரம் நூல்களைக் கொண்டிருந்த இந்த நூல் நிலையத்தை ஒரு ஏழு நாளும் எரியில் இருந்து தப்ப முடியாத விதமாக எரித்து சாம்பலாக்கி உலக வரலாற்றில் தமக்கென்று ஒரு தனி இடத்தை தேடிக் கொண்டனர் என்று அமுதலிங்கம் அவர்களுடைய கூற்று இருக்கிறது.

அதேநேரம் இந்த நூல் நிலையம் பற்றி என்னுடைய கருத்திலையும் நான் தெளிவாகச் சொல்லியிருக்கின்றேன். நூலகம் 01.06.1981 ஆம் திகதியில் இரவோடு இரவாக தீக்கிரையாக்கப்பட்டது என்பது என்னுடைய கருத்து. இது 1984 ஆம் ஆண்டு. இது எல்லாவற்றுக்கும் மேலாக அண்மையிலே இந்த நூலகத்திலே நூலகராக இருந்த பிரதம நூலகராக நீண்ட காலமாக இருந்த திருமதி ரூபவதி நடராஜா அவர்கள் தன்னுடைய யாழ்ப்பாண பொது நூலகம் அன்றும் இன்றும் என்ற புத்தகத்திலே 66 ஆவது பக்கத்திலே அவர் அதிலே சொல்லியிருக்கிறார். மாவட்ட அதிகாரி தேர்தல் கூட்டம் அன்றும் மே மாதம் 31 ஆம் திகதி மாலை நாச்சிமார் கோயிலடியில் நடைபெற்றது என்றும் அதன் தொடர்ச்சியாக என்றும் அதைத் தொடர்ந்து பல உத்தியோகத்தர் தாக்கப்பட்டது சம்பந்தமாகவும் தொடர்ச்சியாக கூட்டணி காரியாலயம், யோகேஸ்வரன் வீடு என்பன தாக்கப்பட்டதைத் தொடர்ந்து அதன் தொடர்ச்சியாக மறுநாள் ஈழநாடு பத்திரிகை காரியாலயமும் யாழ். நூல் நிலையமும் எரிக்கப்பட்டது.

மே 31 இற்கு பிறகு மறுநாள் 01.06. தான் அவர் எழுதியிருக்கிறார்.  இதில் நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் நாங்களும் வரலாற்றோடு இருக்கிறவர்கள் என்பதால் மிக முக்கியமான விடயத்தினுடைய வரலாறு தவறான திகதியின் அடிப்படையிலே அது முன்கொள்ளப்படுகின்றது. இன்றைய ஊடகங்களிலே கூட மே 31 ஆம் திகதி என்று எழுதப்பட்டிருக்கின்றது. இது ஒரு சரியான வரலாற்று தவறாக அமையலாம். ஆகவே இதிலே நான் சொன்ன அமரர் அமிர்தலிங்கம் இல்லை,பேராசிரியர் நேசையா இல்லை, இராசா விசுவநாதன் இல்லை. இருந்தாலும் நூலகர் லண்டனில் இருக்கின்றார். நான் இதிலே நேரடியாக சம்பந்தப்பட்டவனாக இருக்கிற நிலையிலே அந்த திகதியை தவறான திகதி என்பதால் தொடர்ந்து பாவிக்கிறது தவறு என்ற தகவலை பொதுவான ஊடகங்கள் ஊடாக சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் தெரிவிக்கின்றேன். அதாவது அநேகமானவர்கள் தங்களுக்கு இசைந்தபடி அல்லது தாங்கள் சிந்திக்கின்றபடி அந்தத் திகதியை எழுதுகின்றார்கள் என்று நான் நினைக்கின்றேன். உண்மையாக இந்த ஆவண ரீதியாக பார்க்கின்ற போது இந்த நூலகம் மற்றைய பக்க விடயங்கள், பக்க நிகழ்வுகள் பற்றி நான் பேச விரும்பவில்லை. என்னுடைய விடயம் இந்த நூலகம் 01.06.1981 ஆம் திகதி இரவில்தான்  எரிக்கப்பட்டது என்பதுதான். இன்று இதை நான் தெளிவுபடுத்த வேண்டும். இதை தெளிவுபடுத்துவதற்கு நான் இன்னமும் உயிரோடு இருக்கின்றேன். நானும் உயிரோடு இல்லை என்றால் இது எல்லாம் இல்லாமல் போகும். முன்னர் 01.06 என்று பின்னர் 31 என்று என்ன இரண்டு நூலகமா எரிக்கப்பட்டது. அப்படி தவறாக எழுதுகிறவர்கள் எல்லாம் தங்கள் தங்கள் பாட்டிலே எழுதுகிறார்கள். நான் நேற்றோ இன்றோ பார்த்தேன் 30 ஆம் திகதி என்றும் ஒருவர் சொல்கின்றார்.

அவரவருக்கு விருப்பமான திகதியைப் போடுகின்றார்கள். எங்களுடைய தனிப்பட்ட நிகழ்வுகளின் திகதிகள் மாறலாம். ஆனால் இதுவொரு பெரிய வரலாறு. அதனுடைய திகதியை, அழிவுத் திகதியை மாற்றக் கூடாது. யாரும் மாற்றக்கூடாது. அது வந்து fact உண்மையான தரவு. இது மக்களுக்கும் சம்பந்தப்பட்ட எல்லாருக்கும் சொல்ல வேண்டும் என்பதற்காகதான் இன்று நான் உங்களைக் கூப்பிட்டிருந்தேன். உங்களுக்கு ஒன்றை நான் வெளிப்படுத்த வேண்டும். ஆதாரங்கள். நான் என்னுடையதாகச் சொல்லவில்லை. இருக்கக்கூடிய ஆவணங்கள். இன்னும் பல ஆவணங்கள் இருக்கின்றது. ஆனால் இது போதுமானது என்று நினைக்கின்றேன். ஆரம்ப ஆவணங்கள்  இது 84, 82 எல்லாவற்றிலும் 01.06.1981 என்றுதான் இருக்கின்றது. இதை முக்கியமாக மக்களுக்குச் சென்றடைய வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம் என குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here