போட்டோக்களை எடிட் செய்து வெளியிட்டு சமூக ஊடங்களில் பிரபலமான அழகி: நிஜ படங்கள் வெளியானதில் ரசிகர்கள் பேரதிர்ச்சி!


தொழில்நுட்பம் பொய் சொல்லாது என்பார்கள்.

அது உண்மையில்லை போல தெரிகிறது. கமராவின் கண்களும் பொய் சொல்லும் என்றுதான் இப்போது நெட்டிசன்கள் பலரும் சொல்ல ஆரம்பித்து விட்டனர்.

பொதுவாகவே எல்லா ஸ்மார்ட் போன்களிலும் புகைப்படங்களை எடிட் செய்யும் வசதிகள் உள்ளன. பெண்களை குறிவைத்து உருவாக்கப்படும் இந்த வசதிகளால், யதார்த்தத்திற்கும், புனைகதைகளிற்குமிடையிலான கோடுகள் மங்கலாகி விட்டது.

அசலும்-நகலும்

நமக்கு நன்கு தெரிந்த பெண்களும், இந்த வசதிகளை பாவித்து ஆளே அடையாளம் தெரியாத புகைப்படங்களை சமூக ஊடங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.

இது நம்மூர்ப்பிரச்சனை மட்டும் கிடையாது. உலகப் பிரச்சனை.

சீனாவின் சமூக ஊடக பிரபலம் Coeyyyy. அம்மணி அடிக்கடி விதவிதமான புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவார். “என்ன அழகு… எத்தனை அழகு… கோடி மலர் கொட்டிய அழகு“ என கவிதை எழுதாத குறையாக ஜொள்ளர்கள் அவரது சமூக ஊடக பக்கங்களே பதியென கிடப்பார்கள்.

அவரது உண்மையான புகைப்படங்களை யாரோ ஒருவர் வெளியிட்டுள்ளார். அதை பார்த்து விட்டு, தலையில் துண்டை போடாத குறையாக ஜொள்ளர்கள் எல்லோரும் தலைமறைவாகி விட்டனர்.

சீனாவின் பிரபலமான Xiaohongshu அல்லது RED செயலியை பாவித்தே தனது புகைப்படங்களை எட்டி செய்து வெளியிட்டு வந்துள்ளார்.

அவர் புகைப்படங்கள் எடுத்து, எட்டி செய்து பகிர்ந்த பின்னர், எடிட் செய்யாத புகைப்படங்களை யாரோ பகிர்ந்துள்ளனர்.

சீன அழகியை பலரும் கலாய்த்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here