அர்மேனியா பிரதமருக்கு கொரோனா உறுதி


அர்மேனியா பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அர்மேனியா பிரதமர் நிகோல் பாஷினியன் தனது பேஸ்புக் பக்கத்தில் தனக்கு கொரோனா வைரஸுக்கு எந்த அறிகுறி இல்லாத நிலையில் செய்யப்பட்ட மருத்து பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் நான் வீட்டிலிருந்து பணிபுரிய இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஹொட்டல் ஊழியர் மூலம் தனக்கு கொரோனா பரவியதாக நிகோல் பாஷினியன் தெரிவித்துள்ளார். மேலும் நிகேலின் குடும்பத்தினர்களுக்கு கொரோனா உறுதிச் செய்யப்பட்டுள்ளது என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

30 இலட்சம் மக்கள் தொகைக் கொண்ட அர்மேனியாவில் 9,000 க்கும் அதிகமானவர்களுக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 130 பேர் பலியாகி உள்ளனர்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், தெற்காசிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஐரோப்பிய நாடுகளில் பிரிட்டன், பிரேசில், இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்தன.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸுக்கு 62,67,408 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,73,961 பேர் உயிரிழந்துள்ளனர். 28,47,541 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா தொற்று மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here