இரண்டரை மாதங்களின் பின் இலங்கை கிரிக்கெட் அணி பயிற்சியை ஆரம்பிக்கிறது!


சுமார் இரண்டரை மாதங்களுக்குப் பிறகு இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் வீரர்கள் இன்று (1) பயிற்சி நடவடிக்கைகளை ஆரம்பிக்கிறார்கள்.

ஒப்பந்தப் பட்டியலில் உள்ள 13 வீரர்கள் இன்று பயிற்சிக்காக அழைக்கப்பட்டுள்ளனர். இந்த வீரர்கள் 12 நாள் ஹொட்டலொன்றில் தங்க வைக்கப்பட்டு, பயிற்சியில் ஈடுபடுவார்கள்.

பயிற்சியின் முதல் நாளான இன்று,  வீரர்கள் ஒரு ஹோட்டலில் உடற்பயிற்சி மையம் மற்றும் நீச்சல் குளம் ஆகியவற்றைப் பயன்படுத்துவார்கள்.

இது தவிர, கபடி, பளுதூக்குதல் வீரர்களிற்கும் இன்று முதல் பயிற்சிகள் ஆரம்பிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here