இந்தவார ராசிபலன் (31.5.2020- 6.6.2020)


செவ்வாய், ராகு, புதன் நலம் தரும் அமைப்பில் உள்ளனர். கடின வேலைகளை சுறுசுறுப்பாகவும், ஆர்வமாகவும் செய்து முடிப்பீர்கள். எந்த சூழ்நிலையிலும் நிதானத்தை கடைபிடிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்னை நீங்கும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக திட்டமிடுவீர்கள். உத்யோகஸ்தர்கள் அவசர முடிவுகளை எடுப்பதை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை அனுசரித்து சென்றால் கூடுதல் லாபத்தை பெறலாம். நண்பர்களிடம் கடந்த கால நினைவுகளை கூறி மகிழ்ச்சி கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் : 4.6.2020 பகல் 12:55 – 6.6.2020 மாலை 4:41 மணி
பரிகாரம்: சிவன் வழிபாடு சிரமத்தை குறைக்கும்.

புதன், சுக்கிரன், செவ்வாய் அனுகூல அமைப்பில் உள்ளனர். எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் வளரும். புதிய வேலைக்கு முயற்சிப்பவர்கள் சிறிது காலம் பொறுமையாக இருப்பது சிறந்தது. பெண்களுக்கு தேவையான விஷயங்கள் கைகூடி வரும். உறவினர் வீட்டு திருமண ஏற்பாடுகளை சுமூகமாக முடித்து வைப்பீர்கள். கலைத் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். வியாபாரத்தில் சில சிக்கலான விஷயங்களில் உடனடியாக முடிவு எடுக்க முடியாமல் தடுமாற்றம் அடைந்தாலும் சமாளிப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் வேலையில் கவனமாக இருந்தால் பதவி உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

பரிகாரம் : ராமர் வழிபாடு ஆரோக்கியம் தரும்.

செவ்வாய், குரு சாதகமான அமைப்பில் உள்ளனர். மனதடுமாற்றம் இல்லாமல் நிதானமாக செயல்பட்டு நன்மை அடைவீர்கள். கணவன், மனைவி இடையே திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமாக இருங்கள். நெருங்கிய உறவினர் வகையில் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கலைத் துறையினருக்கு எதிர்பாராத வாய்ப்புகள் அமைவதால் மகிழ்ச்சி அதிகரிக்கும். அலுவலகத்தில் சகபணியாளர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் சில புதிய மாற்றங்களை செய்து லாபத்தை பெருக்குவீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிக்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பர்.

பரிகாரம் : பெருமாள் வழிபாடு நல்வாழ்வு தரும்.

ராகு, கேது, சூரியனால் எதிர்பாராத நன்மை உண்டாகும். தன்னம்பிக்கையுடன் பொதுநல விஷயத்தில் ஈடுபட்டுப் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் ஏதாவது ஒரு பிரச்னை தலைதுாக்கலாம். பெண்களின் அழகும், பொலிவும், அறிவுத் திறனும் கூடும். மகளுக்கு தள்ளிப் போன திருமண வாய்ப்புகள் தேடிவரும். உத்யோகஸ்தர்களுக்கு இதுவரை இருந்து வந்த வீண் பயங்கள் குறையும். வியாபாரத்தில் பணவிஷயங்களில் யாரையும் நம்பி ஏமாறாமல் மிகுந்த எச்சரிக்கையுடன் இருங்கள். நல்லவர்களுடன் ஏற்படும் நட்பு காரணமாக நன்மைகள் நடக்கும். சகோதர, சகோதரிகளுக்கு அரசாங்க வகையில் நன்மைகள் ஏற்படும்.

பரிகாரம் : அனுமன் வழிபாடு வெற்றி தரும்.

சந்திரன், .சுக்கிரன், ராகுவால் அதிர்ஷ்டகரமான பலன் உண்டாகும். உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரியின் ஆதரவால் பணியில் இருந்து வந்த அலைச்சல் குறையும். புதிய நண்பர்களால் நன்மை ஏற்படும். தெய்வீக சிந்தனைகளால் மன அமைதியுடன் இருப்பீர்கள். வெகுநாட்களாக வாங்க நினைத்த பொருட்கள் வீடு வந்து சேரும். பெண்களுக்கு ஆடை, ஆபரணங்கள் பற்றிய சிந்தனைகள் குறையும். தொழில் விஷயமாக எந்தவித புதிய திட்டங்களையும் இப்போதைக்கு தீட்ட வேண்டாம். குடும்பத்தினருடன் விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள். கடந்த காலத்தில் உங்களைத் தூற்றியவர்கள் தற்போது போற்றுவார்கள்.

பரிகாரம் : சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

செவ்வாய், சுக்கிரன், புதனால் யோகம் உண்டாகும். நீண்டகால எண்ணங்கள் தற்போது நிறைவேறும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த வங்கிக் கடன்கள் கிடைப்பதால் வியாபாரத்தை பெருக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவர். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழிலில் அரசு வகையில் இருந்த கெடுபிடிகள் குறைவதால் லாபம் அதிகரிக்கும். சிலருக்கு உறவினர் வகையில் சிறு அளவில் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்புள்ளது. பெண்களுக்கு விரும்பிய விஷயங்கள் நல்ல விதமாக நடக்கும். பணப்புழக்கம் அதிகரிப்பதால் பழைய கடன்களை அடைப்பீர்கள். அரசு வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும்.

பரிகாரம் : விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.

சுக்கிரன், புதன், செவ்வாய் நற்பலன் அளிக்கும் விதத்தில் உள்ளனர். சவால்களை எதிர்கொண்டு கடுமையாக உழைத்து வெற்றி காண்பீர்கள். பலசரக்கு, காய்கறி வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். சுயதொழில் செய்பவர்களுக்கு அரசு வகையில் ஆதாயம் உண்டு. நிலுவைப் பணிகளை விரைவாக முடித்து மேலதிகாரியிடம் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் நிதி நிலைமையில் இருந்து வந்த மந்தநிலை மாறும். தொலை துாரப் பயணங்களை இப்போதைக்கு ஒத்திப் போடுவது நல்லது. வெளிநாடுகளில் வசிக்கும் நெருங்கிய உறவினர்களிடமிருந்து நல்ல தகவல்கள் வரும். பெண்கள் ஆடை, ஆபரணங்களை அன்பளிப்பாக பெற்று மகிழ்ச்சி கொள்வர்.

பரிகாரம் : குரு வழிபாடு சுபவாழ்வு தரும்.

முக்கிய பிரமுகரின் சந்திப்பு கிடைத்து அவர்களின் உதவியை பெறுவீர்கள். தந்தையுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தை சரிசெய்ய முயற்சிப்பீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அலுவலக உயரதிகாரியின் உதவியால் நிலுவைப் பணிகளை முடிப்பீர்கள். மனைவியின் மூலம் எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும். கலைத் துறையினர் தங்கள் துறைகளில் சாதிக்க புதிய முயற்சியை மேற்கொள்வர். உடல் நலனில் கவனம் தேவை. குடும்ப விஷயங்களை அக்கம் பக்கத்தினரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

சந்திராஷ்டமம் : 24.5.2020 மாலை 5:43 – 26.5.2020 நள்ளிரவு 12:24 மணி
பரிகாரம் : சிவன் வழிபாடு சிரமத்தை போக்கும்.

புதன், சுக்கிரனால் கூடுதல் நன்மை ஏற்படும். எதிலும் தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள். சிலருக்கு வாகன வசதிகள் குறைய வாய்ப்பு உள்ளது. பெண்களின் எண்ணங்கள் நிறைவேறுவதில் சிறு அளவில் தாமதம் ஏற்படும். வாழ்க்கையில் முன்னேறுவதற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொதுநலப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சுற்று வட்டாரத்தில் நல்ல புகழும், கௌரவமும் உண்டாகும். வியாபாரத்தில் சில புதிய மாற்றங்களை செய்து லாபத்தை பெருக்குவீர்கள். சுபச்செலவுகள் ஏற்படும். அலுவலகப் பணிகளில் பல குறுக்கீடுகள் வந்தாலும் அதை சாமர்த்தியமாக சமாளித்து வெற்றி காண்பீர்கள்.

பரிகாரம் : தன்வந்திரி வழிபாடு தொழிலில் உயர்வு தரும்.

சூரியன், சுக்கிரன் நன்மைகளை வழங்கும் அமைப்பில் உள்ளனர். எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்த பிறகே முடிவெடுக்கவும். தொழிலில் எதிர்பார்த்த அளவில் ஆதாயங்கள் இருக்காது என்றாலும் லாபத்திற்கு குறைவிருக்காது. பெண்கள் பயணத்தின் போது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பணியாளர்களுக்கு வீண் அலைச்சல்கள் ஏற்படும். சுயதொழில் செய்பவர்களுக்கு அரசு வகையில் ஆதாயம் உண்டு. சுற்றத்தார் மூலமாக எதிர்பார்த்த அளவுக்குப் பண உதவிகள் கிடைக்காது. கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உடன்பிறந்தவருக்கு விரும்பிய வேலை கிடைப்பதால் சந்தோஷம் அடைவீர்கள்.

பரிகாரம் : சாஸ்தா வழிபாடு துன்பம் போக்கும்.

மன தைரியம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களால் வீண் செலவுகள் உண்டாகும். நீண்ட நாளாக இருந்து வந்த ஒற்றைத் தலைவலி, நரம்புக் கோளாறுகள் தீர்ந்து நிம்மதியடைவீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல், வாங்கலில் நின்று போன தொகை வசூலாகும். அலுவலகத்தில் நீங்கள் செய்யும் தவறுகளை திருத்திக் கொண்டால் பல நன்மைகளை பெறலாம். தொழில் செய்பவர்கள் நிதானமாக யோசித்து எந்தவொரு செயலிலும் முடிவெடுங்கள். பிள்ளைகள் உங்களின் மனம் குளிரும் படி நடப்பார்கள். சவால்களை எதிர்கொண்டு கடுமையாக உழைத்து வெற்றி காண்பீர்கள். குடும்பத்தினருடன் விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள்.

பரிகாரம் : அனுமன் வழிபாடு வெற்றி தரும்.

எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் வளரும். குடும்ப பொருளாதாரத்தை பெருக்குவதற்கான பல முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உறவினருடன் இருந்து வந்த மனஸ்தாபங்களை உங்களின் மனைவி சரிசெய்துவிடுவார். வாகனம், பெட்ரோல் மற்றும் எண்ணெய் தொடர்பான நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் பதவி உயர்வு பெறுவர். வியாபாரத்தில் எதிர்கொள்ளும் பிரச்னைகளை எளிதாகச் சமாளிப்பீர்கள். மகளிடம் இருந்து நல்ல தகவல் வரும். புதிய நண்பர்களிடம் அதிக நம்பிக்கை வைக்க வேண்டாம். மாணவர்களின் நீண்டநாள் கனவு நிறைவேறும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை.

பரிகாரம் : அம்பாள் வழிபாடு மகிழ்ச்சி தரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here