மண்ணை தோண்டியபோது உயிருடனிருந்த பிஞ்சுக்குழந்தை!


வீட்டு பணியின் போது புதிதாகப் பிறந்த குழந்தை மண்ணில் உயிருடன் புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது

உத்திரப்பிரதேசத்தில் சனவுரா கிராமத்தில் சித்தார்த்நகர் பகுதியில் கடந்த 25-ஆம் தேதி, வீடு கட்டுவதற்கான வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டு இருந்தது. அப்போது அங்கிருந்த மண்ணின் உள்ளே பிஞ்சு குழந்தை ஒன்று அழும் சத்தம் கேட்டு திடுக்கிட்டனர். வேலை பார்த்தவர்கள் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதையடுத்து உடனடியாக அப்பகுதியை தோண்டி பார்த்த போது, குழந்தை உயிருடன் இருந்ததால், உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அப்போது குழந்தையை சோதித்த பார்த்த மருத்துவர்கள், வாயில் மட்டும் மண் போய் உள்ளது. மற்ற படி குழந்தையின் உயிருக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து தொடர்ந்து குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த குழந்தை யார்? தாய் யார்? என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here