இறுதி அஞ்சலி நிகழ்வை அரசியல் நிகழ்வாக்காதீர்கள்: கோட்டா கொதிப்பு!


காலம் சென்ற அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதி அஞ்சலி நிகழ்வை, அரசியல் பிரச்சாரமாக அவரது வாரிசுகள் நடத்துவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிருப்தியடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த அதிருப்தியே, நேற்று அவசரகதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க காரணமாக அமைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா அச்சுறுத்தல் நிலவும் சமயத்தில், தொண்டமானின் நேற்றைய அஞ்சலி நிகழ்வுகள் சமூக ஊடகங்களிலும் பரவலாக கவனத்தை ஈர்த்திருந்தன. வெவண்டனிலுள்ள அவரது பூர்வீக இல்லத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டது, பின்னர் அங்கு அஞ்சலிக்கு வைக்கப்பட்டதில் அவரது வாரிசுகள் அரசியல் செய்வதாக, கோட்டாபாயவிடம் சுகாதாரத்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது சுகாதார நெருக்கடிகளை ஏற்படுத்தலாமென்றும் எச்சரித்துள்ளனர். இதையடுத்து அதிருப்தியடைந்த கோட்டா, இறுதிநிகழ்வில் அரசியல் செய்ய வேண்டாமென சம்பந்தப்பட்ட தரப்பினரை அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் பின்னணியிலேயே நேற்று ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here