‘ஒரு கொலைகாரன் இங்கு வாழ்கிறான்’: அமெரிக்க பொலிஸ்காரரின் வீட்டின் முன்னாள் எழுதப்பட்ட வசனம்!


அமெரிக்காவில் கறுப்பின மனிதர் ஒருவரின் கழுத்தில் முழங்காலை அழுத்திக் கொன்ற பொலிஸ்காரனின் வீட்டுக்கு வெளியே, ஒரு கொலைகாரன் இங்கு வாழ்கிறான் என எழுதப்பட்டுள்ளது.

மினாசொட்டா மாநிலத்தின் மினியாபொலிஸ் நகரத்தில் கடமையாற்றிய பொலிஸ் அதிகாரியான டெரென் சவுன் இந்த கொலையை செய்திருந்தார். ஓக்டேலில் உள்ள அவரது வீட்டுக்கு எதிரில், வீதியில் இந்த வாசகம் எழுதப்பட்டுள்ளது.

இந்த கொலைச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்துள்ள அமெரிக்க மக்கள் பெரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், போராட்டக்காரர்கள் சிலர், சவுனின் வீட்டிற்கு எதிரில் இதனை எழுதியுள்ளனர்.

இதேவேளை, சவுனின் மனைவி கெல்லி, காசோடி மோசடியில் குற்றம்சாட்டப்பட்டவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 2005 பெப்ரவரியில் இந்த சம்பவம் நடந்தது. இதையடுத்து அவர் மீது கிரிமினல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. பின்னர் குஜய் சியோங் என்பவரை மணந்து, ஜுலை மாதத்தில் கடனை அடைத்து, வழக்கிலிருந்து விடுபட்டார்.

முதல் கணவர் உயிரிழந்த பின்னர் மினியாபோலிஸில் உள்ள ஹென்னெபின் கவுண்டி மருத்துவ மையத்தில் கதிரியக்கவியலாளராக பணிபுரிந்தார். அங்கு பரிசோதனைக்காக கைதியொருவரை அழைத்து வந்த சவுனுடன் கதாதல் வசப்பட்டு, 2010 இல் சவுனை மணந்தார்.

லாவோஸிலிருந்து அகதியாக அமெரிக்காவிற்கு வந்த குடும்பத்தை சேர்ந்தவர் கெல்லி.

மினசொட்ட மாநிலத்தின் அழகியாக 2018இல் அவர் தெரிவாகி, தேசிய சுற்றுப்போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here