டீல் காரர்களடமிருந்து ஐ.தே.கவை மீட்டெடுப்போம்: சஜித் தரப்பு உறுதி!


ஐக்கிய தேசியக் கட்சியின் சிலர் அரசாங்கத்துடன் அரசியல் இலாபம் தேடும் நோக்கில் இணைந்து கொண்டு தேர்தலின் போது ஐ.ஆத.க.வை தோல்வியடையச் செயற்வதற்காகவே முயற்சித்து வருகின்றனர். இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதுடன், இந்த சதிக்காரர்களிடமிருந்து ஐ.தே.க.வை மீட்பதற்காகவும் தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் ரஞ்சித் மத்தும பண்டார, கபீர் ஹாசீம், லக்ஸ்மன் கிரியெல்ல ஆகியோர் இவ்வாறு தெரிவித்திருந்தனர்.

கபீர் ஹசீம்,

ஐக்கியதேசியக் கட்சியின் செயற்குழுவின் அனுமதியுடனே ஐக்கிய மக்கள் சக்தி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அது நீதிக்கு புறம்பாக உருவாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ளமுடியாது, 1994 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை ஐ.தே.க.வைச் சேர்ந்த சிலர் அரசாங்கத்துடன் டீல் செய்துக் கொண்டு ஐ.தே.க.வை தோல்வியடையச் செய்வதற்கான வழியை அமைத்து வருகின்றனர். இவர்களிடமிருந்து ஐ.தே.க.வை மீட்டெடுப்பதோடு மாத்திரமன்றி பொதுத் தேர்தலையும் வெற்றிக் கொள்வோம்.

கொரேனா வைரஸ் மத்தியிலே அரசாங்கம் முறையான முகாமைத்துவம் இன்றி பெரிதும் விமர்சிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில்இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு எதிர்வரும் பொதுத் தேர்தலை வெற்றிக் கொண்டு மக்களுக்கு நலன்களை பெற்றுக் கொடுப்பதே எமது பிரதான நோக்கமாகும். தற்போது ஐ.தே.க. எமக்கு எதிராக முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை புறந்தள்ளிவைத்து விட்டு தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பதுடன் , தேர்தலுக்கு பின்னர் அவர்களுக்கு பதிலளிக்கவுத் தயாராகவுள்ளோம்.

லக்ஸ்மன் கிரியெல்ல

ஐ.தே.வின் செயற்குழுவின் அனுமதியுடனே சஜித் பிரேமதாசவின் தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டுள்ளது. இதனை சட்டவிரோதமான உருவாக்கியுள்ளதாக ஐ.தே.க. முன்வைக்கும் குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது. சஜித் தலைவர் என்றும், ரஞ்சித் மத்தும பண்டார பொதுச்செயலாளர் என்றும் ஐ.தே.க செயற்குழுதான் தீர்மானித்தது.

ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றிக்காக எம்முடன் இணைந்து செயற்படும் அனைத்து பிரதேச சபை உறுப்பினர்களதும் பதவிகளையும் , அவர்களது உறுப்புரிமையையும் பாதுகாப்பதற்காகவும் அவர்களுக்காக முன்னிலையாவோம். எமது கட்சியில் பல சட்டதரணிகள் இணைந்துக் கொண்டுள்ளனர். அவர்கள் ஊடாக இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

எமது மனசாட்சிக்கமையவும், மக்களின் நலனை பாதுகாக்கவுமே இன்று நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம். இதுவே மக்களின் எதிர்பார்ப்பாகும். அதற்கமையவே ஜித் பிரேமதாசவை பிரதர் வேட்பாளராக களமிறக்கியுள்ளோம்.ஐ.தே.க.வில் சிலர் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவே தயாராக இருக்கின்றனர். அவர்களது கருத்துகளிலிருந்து இதனை புரிந்துக் கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. இதனாலேயே நாங்கள் விலகி வந்துள்ளோம்.

ரஞ்சித் மத்துமபண்டார

ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்குவதற்காக ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அனுமதி வழங்கியிருந்ததுடன் , அதற்கு அனுமதி வழங்கி அவர் கையொப்பமிட்ட கடிதம் எம்மிடம் உள்ளது. இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் இது தொடர்பில் பத்திரிக்கையில் செய்தி வெளியிட்டுள்ளார். அதனால் இது சட்டவிரோதமாக உறுவாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர்கள் அரசாங்கத்திடம் டீல் செய்துக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியை தோல்வியடையச் செயற்வதற்கான முயற்சிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றார்.

இதன்போதுமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் பீ பெரேரா, சுஜீவ சேனசிங்க உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here