கொரோனா சோதனை மாதிரிகளை பறித்து சென்ற குரங்குகள்


இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் கொரோனா பரிசோதனை மாதிரிகளை குரங்குகள் திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மீரட் மருத்துவ கல்லூரி வளாகத்தில் ஆய்வக பணியாளர் ஒருவர், நோயாளிகள் 3 பேரின் கொரோனா பரிசோதனை மாதிரிகளை எடுத்து சென்றுள்ளார். அப்போது அவரை தாக்கிய குரங்குகள் கூட்டம், கையில் இருந்த சோதனை மாதிரியை பறித்து சென்றுள்ளது. மரத்தில் சென்று உட்கார்ந்து கொண்ட குரங்குகளில் ஒன்று சோதனை மாதிரியை கடித்து மென்றுள்ளது.

மேலும் கொரோனா மாதிரிகளை குரங்குகள் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிக்கு கொண்டு சென்றுள்ளதால், கொரோனா தொற்று மேலும் பரவக்கூடுமென உள்ளூர் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here